Last Updated : 10 Jul, 2020 08:19 PM

 

Published : 10 Jul 2020 08:19 PM
Last Updated : 10 Jul 2020 08:19 PM

திருப்பத்தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன் பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: தமிழக ஆளுநரிடம் கிராம மக்கள் புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன்னுக்கு மேல் பழமையான மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டது. இதுகுறித்து கிராமமக்கள் தமிழக ஆளுநருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே துளாவூர் கிராமத்தில் அரசி, புக்களம் கண்மாய்கள் மூலம் பல நூறு ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர்.

மேலும் இந்த கண்மாய்களை சுற்றி பழமையான வேளாம், வேம்பு, வாகை போன்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் அரசி, புக்களம் கண்மாய்கள் மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் இக்கண்மாயில் அள்ளப்படும் மண்ணை தேசிய நெடுஞ்சாலைக்கு பணிக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்போது வரத்துக்கால்வாய்கள் மட்டும் தூர்வாரப்பட்டு வருகின்றன. தூர்வாருவோர் கண்மாயையொட்டியுள்ள வேம்பு, வாகை, வேளாமரம் ஆகியனவற்றை வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக ஆளுநனருக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து துளாவூரைச் சேர்ந்த நடராஜன் கூறியதாவது: அரசி, புக்களம் கண்மாயை சில மாதங்களுக்கு முன்பு தான் தூர்வாரினர். தற்போது மீண்டும் தூர்வாருவதாக கூறி மண்ணை எடுக்க முயற்சிக்கின்றனர்.

நாங்கள் தடுத்து நிறுத்தியதால், வரத்துக்கால்வாய் தூர்வாருவதாகக கூறி பழமையான மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

அது 30 டன்னுக்கு மேல் இருக்கும். இதுகுறித்து கேட்டால் அரசு சார்பில் நேரடியாக தூர்வாருவதால் ஜேசிபி இயந்திரத்திற்கு டீசல் போட மரங்களை வெட்டுவதாக கூறுகின்றனர்.

மரங்களை வெட்டுவதாக இருந்தால், எங்களுக்கு தூர்வார வேண்டாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆளுநருக்கு புகார் அனுப்பினோம், என்று கூறினார்.

இதுகுறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘வரத்துக்கால்வாயில் இடையூறாக உள்ள மரங்களை தான் வெட்டுகின்றனர்,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x