Published : 10 Jul 2020 07:07 PM
Last Updated : 10 Jul 2020 07:07 PM

தமிழகம் முழுவதும் 51 எஸ்பிக்கள் மாற்றம்: சென்னை துணை ஆணையர்களும் மாற்றம் 

தமிழகம் முழுவதும் 51 மாவட்ட எஸ்பிக்கள், சென்னையில் துணை ஆணையர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்த்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.,

மாற்றப்பட்டவர்களில் முக்கியமான மாவட்டங்கள் வருமாறு:

1. சென்னை சைபர் பிரிவு எஸ்பி செஷாங் சாய் மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
2. அடையாறு துணை ஆணையர் பகலவன் கரூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
3.சென்னை உளவுப்பிரிவு எஸ்பி அரவிந்தன் திருவண்ணாமலை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
4. திருவண்ணாமலை எஸ்.பி.சிபிச்சக்ரவர்த்தி சென்னை நிர்வாக ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
5.சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி முத்தரசி சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
6. சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையர் விக்ரமன் அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
7.கரூர் எஸ்பி பாண்டியராஜன் சென்னை வணிக குற்றத்தடுப்பு விஜிலென்ஸ் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
8.திருவள்ளூர் பொன்னேரி சப்டிவிஷன் ஏஎஸ்பி அல்லாட்டிப்பள்ளி பவன்குமார் ரெட்டி எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
9. திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் நிஷா சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. விரிவாக்கம் பிரிவு ஏஐஜி கே.பாலகிருஷ்ணன் மாதாவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
11.மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
12.நெல்லை வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகிரன் பிரசாத் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தி.நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
13.மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக் சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
14.கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாதா சென்னை சிபிசிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
15. திருப்பூர் சட்டம் ஒழுங்கு எஸ்பி பத்ரிநாராயணன் கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
16. கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் புதுக்கோட்டை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
17.மதுரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி ஸ்டாலின் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
18. பெண்கள் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் என்.குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
19.சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தங்கதுரை ஈரோடு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
20. ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் நாமக்கல் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
21.நாமக்கல் எஸ்பி அர.அருளரசு கோவை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
22.கோவை எஸ்பி சுஜித் குமார் மதுரை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
23.மதுரை எஸ்பி மணிவண்ணன் திருநெல்வேலி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
24.திருநெல்வேலி எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
25. சென்னை சைபர் பிரிவு எஸ்பி சண்முகப்பிரியா காஞ்சிபுரம் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
26. சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் (கிழக்கு) பெரோஷ்கான் சென்னை காவல் ஆணையரக துணை ஆணையராக (நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளார்.
.27.சென்னை காவல் ஆணையரக துணை ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் (கிழக்கு) மாற்றப்பட்டுள்ளார்.
.28.கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோஹர் சென்னை காவலர் நலன் ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
29.சென்னை காவலர் நலன் ஏஐஜி அதிவீரபாண்டியன் கீழ்பாக்கம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
30.திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி ஜெயச்சந்திரன் திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
31.தி.நகர் துணை ஆணையர் அஷோக்குமார் சென்னை தலைமைச் செயலக பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
32.மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சஞ்சய் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட 33 அதிகாரிகளுடன் மேலும் 18 எஸ்பிக்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x