விருதுநகரில் ஒரே வாரத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா: போதிய மருத்துவர்கள் இல்லாமல் தவிப்பு

விருதுநகரில் ஒரே வாரத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா: போதிய மருத்துவர்கள் இல்லாமல் தவிப்பு
Updated on
1 min read

சென்னை, மதுரையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த ஒரே வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய மருத்துவர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இரட்டை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று இலக்கத்தைத் எட்டியுள்ளளது.

அதன்படி, கடந்த 4ம் தேதி 100 பேரும், 5-ம் தேதி 107 பேரும், 6-ம் தேதி 86 பேரும், 7-ம் தேதி 253 பேரும், 8-ம் தேதி 70 பேரும், 9-ம் தேதி 289 பேரும் இன்று 129 பேரும் என மொத்தம் 1,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய இட வசதிகளும் மருத்துவர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்களும் கரோனை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலிவியர்கள் சுமார் ஒரு வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகே மீண்டும் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

இதனால், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிக்காக உடனடியாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செலிவிலியர்கள் 6 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படைியில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகமும் வெளியிட்டுள்ளது.

போதிய மருத்துவர்கள், செலிவியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே நாளுக்கு நாள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நோய் தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில், கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவரை தொற்று உள்ளதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து சென்றுள்ளனர்.

கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தோற்று இல்லை என்பது நேற்று தெரியவர அவரை பொது வார்டுக்கு மாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in