விஐடி பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து

விஐடி பல்கலைக்கழகம்: கோப்புப்படம்
விஐடி பல்கலைக்கழகம்: கோப்புப்படம்
Updated on
1 min read

வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் தரப்பில் இன்று (ஜூலை 10-ம் தேதி) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு விஐடி வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திரப்பிரதேசம்), போபால் (மத்தியபிரதேசம்) வளாகங்களில் படிப்பதற்காக மாணவர்கள் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தனர்.

நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு விஐடி பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறது.

மேலும், மாணவ, மாணவிகள் தங்களின் பிளஸ் 2 பாடத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.

அதேபோல், ஜே.இ.இ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மாணவ-மாணவிகள் தங்களின் ஜே.இ.இ மதிப்பெண்களை விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை உடனடியாக விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் ugadmission@vit.ac.inஎன்ற இணையதளம் அல்லது வாட்ஸ் அப் எண்: 9566656755 அல்லது18001020536 என்ற கட்டணம் இல்லாத தொடர்பு எண் மூலமாக தங்கள் சந்தேகங்களுக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in