ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு: எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் உதவி

ஈரோடு ராஜாஜிபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிவாரணப் பொருள் வழங்கினர்.
ஈரோடு ராஜாஜிபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிவாரணப் பொருள் வழங்கினர்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ . கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:

ஈரோடு மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், நசியனூர் சித்தோடு பேரூராட்சிகளில் 30 ஆயிரம் குடும்பங்களுக்கும் அரிசி காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 27-வது வார்டில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்பட்டது. ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் குடும்பங் களுக்கு எனது சொந்த செலவில் காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in