சென்னை பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டு எண் மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர்வி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணா நகர் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2-வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது என்றும், இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13-ந் தேதியிலிருந்து மடிப்பாக்கம் 600091 அஞ்சலகம் செய்ய உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in