5 ஆண்டு முழுமையான ஆட்சியை கொடுத்தது மைனாரிட்டி திமுக அரசு: மு.க.ஸ்டாலின் பதில்

5 ஆண்டு முழுமையான ஆட்சியை கொடுத்தது மைனாரிட்டி திமுக அரசு: மு.க.ஸ்டாலின் பதில்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லா நேரத்தில், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள 25 கவன ஈர்ப்பு தீர்மானங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கோரினர். அதை பேரவை தலைவர் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து தாமிரபரணி, பவானி, காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்து கொள்ளப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், நீண்ட விளக்கத்தை அளித்தார். அடிக்கடி ‘மைனாரிட்டி திமுக ஆட்சி’ என்று பேசிக் கொண்டிருந்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை திமுக கொடுத்தது. எந்த நிலையிலும் கவிழும் நிலை ஏற்படவில்லை. அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேசும்போது, திமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ‘காசு கட்டுப்பாட்டு வாரிய’மாக இருந்தது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in