

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு, தொழில் முடக்கம் காரணமாக ஏற்கெனவே பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டபோது, அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய ஊரடங்கை கடைப்பிடித்து இன்று (ஜூலை 9) முதல் 19-ம் தேதி வரை அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்படுவதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கணேசன் வெளியிட் டுள்ள அறிக்கையில், பட்டாசு தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் நலன் கருதியும், கரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்தும் விதமாகவும் இந்த சுய ஊரடங்கை அறிவித் துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.