திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதிப்பு
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கரோனா தொற்று 5 ஆயிரத்தை கடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்வரை 4,988 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 217 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,205 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,356 பேர் குணமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு 2,730 ஆக இருந்தது. நேற்று 106 பேருக்கு தொற்று ஏற்பட்டது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,836 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,137 பேர் குணமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்கெனவே 6,855 ஆக இருந்தது. நேற்று மேலும் 87 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,942 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,954 பேர் குணமடைந்தனர்.

எம்எல்ஏ பூரண நலம்

கடந்த மாதம் 12-ம் தேதிகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரும்புதூர் எம்எல்ஏ பழனி 26 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

வேலூர் மாவட்டத்தில் 3மருத்துவர்கள் உள்ளிட்ட 99பேருக்கு பெருந் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,228 ஆக உயர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,534 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 99 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,633 ஆனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in