நடமாடும் காய்கறி மளிகை அங்காடிக்கு அனுமதி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

நடமாடும் காய்கறி மளிகை அங்காடிக்கு அனுமதி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகளுக்கான அனுமதி வருகின்ற நாட்களுக்கும் முழுவதுமாகப் பொருந்தும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று (கோவிட்-19) பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாகவும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்கும் வண்ணமாகவும், வீடுகளுக்கு அருகாமையில் சென்று காய்கறிகளை விற்பனை செய்திட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அது வைரஸ் தொற்று கட்டுப்படுத்துதலில் பெரும் உதவிகரமான நடவடிக்கையாகவும், சிறு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் வழங்குவதாகவும் அமைந்து வருகின்றது. தற்பொழுது, 31 ஜூலை 2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையிலும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்களை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுமதி பெற்ற தள்ளுவண்டிகள், சிறுவாகனங்கள் மூலம் நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த அனுமதி வருகின்ற நாட்களுக்கும் முழுவதுமாகப் பொருந்தும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in