Published : 07 Jul 2020 04:28 PM
Last Updated : 07 Jul 2020 04:28 PM

தமிழக அரசின் தாமத அறிவிப்பால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு 

கடந்த 3 மாதமாக இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கிய தமிழக அரசு, இந்த மாதத்திற்கு மிக தாமதமாகவே இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

அதனால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.

‘கரோனா’ ஊரடங்கால் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் என்று ஒரு கார்டுக்கு வழக்கமாக என்ன வழங்கப்படுமோ அந்தப் பொருட்கள் மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டது.

இந்த மாதம், இலவசத்தை ரத்து செய்து, முன்போல் பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மதுரையில் ரூ.1,000 நிவாரணத்தை தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகையை அரசு, கடந்த ஜூன் மாதம்

27-ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் மக்களுக்கு வழங்கிவிட வேண்டும் என்றும், அதற்கு பிறகு வருவோருக்கு வழங்கப்படாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

தற்போது இந்த நிவாரணத்தை பெறாதவர்கள் வரும் 10-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால், நிவாரணத்தை வாங்காதவர்கள் தற்போது அதை மீண்டும் கடைகளுக்கு சென்று வாங்கி வருகிறார்கள்.

ஊழியர்கள் கடையைத் திறக்காமல் கடை அருகில் அமர்ந்தோ அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்றோ இந்த நிவாரணத் தொகையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு, இந்த ஜூலை மாதமும் ரேஷன் கடைகளில் கடந்த 3 மாதங்களைப் போல் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.

அதனால், தற்போது மதுரையில் ரூ.1000 நிவாரணத்தை தொகை விநியோகிக்கும் பணியுடன் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் சேர்த்து ஊழியர்கள் செய்ய வேண்டிய உள்ளது.

அதனால், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் தினமும், கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:

எங்கள் மீது எந்த தவறும் இல்லை. அரசு ஒரு திடமான முடிவு எடுக்காமல் மாறிமாறி நிலை பாடுகளை மாற்றிக் கொள்கிறது. பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு திட்டம் வைத்திருந்தால் அதை கடந்தமாதம் இறுதியிலே அறிவித்து இருக்க வேண்டும். அதை தாமதமாக அறிவித்ததால் அதற்கான டோக்கன் வழங்கி வருகிறோம்.

மேலும், கிடைக்காதவர்களுக்கு மீண்டும் நிவாரணத்தை வரும் 10ம் தேதி வரை வழங்கவும் உத்தரவிடுவதால் அதையும் வழங்குவதால் பொதுமக்களுக்கு மதுரை மாவட்டத்தில் இந்த மாதம் 10ம் தேதி வரை பொருட்கள் விநியோகிக்க வாய்ப்பு இல்லை, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x