மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம்; காவலர்களுக்கு மனநல ஆலோசகர் அறிவுறுத்தல்

காவலர்களுக்கு மனநல ஆலோசனை.
காவலர்களுக்கு மனநல ஆலோசனை.
Updated on
1 min read

மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம் என நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல ஆலோசகர் ரமேஷ் தெரிவித்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களிடம் காவலர்கள் எந்த விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என, காவல்துறை உயரதிகாரிகள் பல்வேறு ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் மனநல ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 7) நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆலோசகர் ரமேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

"நல்ல தூக்கம், நல்ல சந்தோஷம், நல்ல உணவு இவையே நல்ல மனநிலைக்கு முக்கியக் காரணமாகும். மனம் என்பது ஆழ்ந்து செயல்படக்கூடியது என்பதால் மனதை வருத்தப்படக்கூடிய செயல்களைச் செயல்படுத்தும்போது மனம் பாதிக்கப்படுகிறது.

நமது பொறுப்புகளை கவனமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் நிதானமாகச் செயல்பட வேண்டும். மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம். முதலில் சுவாசித்தல் என்பது மூக்கின் வழியாக நடைபெற வேண்டும். வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது.

இரண்டாவதாக, நம்முடைய சுவசமானது நமது அடிவயிறு வரை சென்று வர வேண்டும். மார்பு வரை மேலோட்டமாக சுவாசிக்கக் கூடாது. ஆழமான சுவாசம் பதற்றத்தைக் குறைக்கிறது. நாம் பதற்றத்துடன் இருக்கும் போது நம்முடைய சுவாசமானது மார்பு வரை மட்டுமே இருக்கும். எனவே நாம் உள் இழுக்கும் ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். எனவே நாம் செய்ய வேண்டிய செயல்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. மன அழுத்தத்தைத் தவிர்க்க மூச்சுப் பயிற்சி, தியானம் இன்றியமையாததாகும்".

இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in