Published : 07 Jul 2020 07:35 AM
Last Updated : 07 Jul 2020 07:35 AM

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி 6 மாவட்டங்களில் 9 நாட்கள் போராட்டம்: விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

திருப்பூர்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் (ஐடிபிஎல்) அமைக்கப்பட உள்ளது.

ஆனால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா காலத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலத்தை எடுக்க வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தை மாற்று வழியில், சாலையோரமாக செயல்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 15-ம் தேதி வரை 9 நாட்களுக்கு, பாதிக்கப்படும் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் சார்பில் வீடு, நிலங்களில் கறுப்பு கொடி கட்டி, ஒவ்வொருவர் நிலங்களிலும் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x