என்எல்சி விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

என்எல்சி விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சென்னையில் தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், கடந்த 3-ம் தேதி ஒருவரும், நேற்று முன்தினம் இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இளநிலை பொறியாளர்கள் வைத்திய நாதன்(48), ஜோதி ராம லிங்கம்(45), இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளி இளங் கோவன்(49) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இந்த மூவரையும் சேர்த்து என்எல்சி விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in