

வங்கியில் ரூ.88 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தங்கம் ஸ்டீல் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள் ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தங்கம் ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் எஸ்பிஐ வங்கியில் ரூ.109 கோடி கடன் வாங்கி இருந் தது. இந்நிலையில் வாங் கிய கடனை அந்த நிறுவனம் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்தது.
இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கடன் வாங்குவதற்காக அந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப் பட்ட ஆவணங்களில் பல போலியானவை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.88.27 கோடி கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐயில் புகார் மனு கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் தங்கம் ஸ்டீல் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
நிறுவன மேலாண் இயக்கு நர் கிருஷ்ணமூர்த்தி, இயக்கு நர்கள் வடிவாம்பாள், சீனி வாசன் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. ஏமாற்றுதல், போலியான ஆவ ணங்கள் தயாரித்தல் உள் ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.