Published : 24 Mar 2014 09:05 AM
Last Updated : 24 Mar 2014 09:05 AM

விஜயகாந்திடம் போனில் பேசி ஆதரவு கேட்ட ரங்கசாமி

புதுச்சேரி பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சீராக்கும் நடவடிக்கையாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி விஜயகாந்தை போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார்.

புதுவையில் பாஜக கூட்டணி யில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. புதுவையில் போட்டியிடுவதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக கட்சி களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மேலும், விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸை தேமுதிக வலியுறுத்தியது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் ரங்கசாமி தொலைபேசியில் சந்தித்து பேசியுள்ளார் என்று தேமுதிக வட்டாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தன.

ஐஜேகே குழப்பம்

இதற்கிடையே, புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளில் ஒருமித்த வேட்பாளர் இறுதி செய்தபின் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆதரவளிக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் புதுச்சேரி கிளை அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதுவையில் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாணப் பட்டவுடன், எங்கள் கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆதரவு கடிதம் அளிப்பார்.அதன்படி தேர்தல் பணியில் மூழு வீச்சில் ஈடுபடுவோம்.

புதுச்சேரியில் தேர்தல் முடிவு தொடர்பாக முடிவு எடுக்க மாநில அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் ஆணைப்படி அதிகாரம் தரப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக உறுதி!

பாமக மாநிலச் செயலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினரைச் சந்தித்து, புதுவையில் பாமக போட்டியிடுவது தொடர் பாக ஆதரவு கேட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் விஸ்வேஸ் வரனோ, "பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்தான் புதுச்சேரியில் போட்டியிடும். பாமக தலைமை தனது முடிவை ஓரிரு நாட்க ளில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x