

ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான மதுரை வழக் கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஏ.கே.ராமசாமியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 7 கேள்விகள் கேட்டனர். இவ்வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தினர் பல்வேறு போராட்டம் நடத் தினர். இதையடுத்து மதுரை வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்ம ராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந் தது. இதையொட்டி, உயர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்ற அறைக் கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதுடன், நீதிமன்ற நட வடிக்கைகளை கேமரா மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டிருந்தது.
அதன்படி, உயர் நீதிமன்றத் தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. நீதிமன்ற அறைக் குள் பத்திரிகையாளர்கள், வழக் கறிஞர்கள் அனுமதிக்கப்பட வில்லை. வழக்கறிஞர்களை அனு மதிக்காததைக் கண்டித்து வழக் கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நீதிபதிகளுக்கு எதிராக வும் கோஷமிட்டனர். அதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நீதிபதிகள் நீதிமன்ற அறைக்கு வந்ததும் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கு விசாரணையின் போது மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி மட்டும் ஆஜரானார். 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பி.தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று இன்றைய விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அடுத்தகட்ட விசாரணையின்போது அவர் ஆஜராக வேண்டும்.
இன்றும், கடந்த விசாரணைக் கும் இடைப்பட்ட பல நாட்களில் நடந்த சம்பவத்தை இந்த நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இன்று ஆஜரான ஏ.கே.ராமசாமியிடம் 7 கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளை நேரடியாக கேட்ட போதிலும் ஏ.கே.ராமசாமி அவற் றுக்கு நேரடியாக பதில் அளிக்கா மல் மழுப்பலாக பதில் கூறினார். மேற்கண்ட பதில்கள் நீதிமன்றத் துக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.
இந்த வினாக்களின் தொகுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையின்போது அவரிடம் மீண்டும் கேள்விகள் கேட்கப்படும்.
ஏ.கே.ராமசாமி மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதன் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி பதிவாளர் (நீதித்துறை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏ.கே.ராமசாமி திவாலானவர் என்று அவரோ அல்லது வேறு யாரோ இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்து, அதன்பேரில் வழக்கறிஞர்கள் பதி வேட்டில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு நீக்கப்பட்ட பிறகு வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் அவர் போட்டி யிட்டாரா, அவ்வாறு போட்டியிட்டு இருந்தால் அவர் மீது வழக்கறிஞர் கள் சட்டம் 1961-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து இந்திய பார் கவுன்சி லும், தமிழ்நாடு பார் கவுன்சிலும் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வழக்கில் தங்களையும் சேர்த் துக் கொள்ளும்படி மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர்கள் தலித் டைகர் பொன்னுசாமி, கே.ஆறுமுகம் மற்றும் இவர் களது வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபாலன் ஆகியோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் மறுஉத்தரவு வரும்வரை தினமும் பாதுகாப்பு அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.