

மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடை களும் மூடப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (5,12,19,26 ஆகிய தேதிகளில்) தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி மதுரையில் நேற்று பால், மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும், பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஏவி மேம்பாலம், நான்கு மாசி வீதிகள், விளக்குத்தூண், கீழவாசல் பகுதிகள், கோரிப்பாளையம், அண்ணா நகர் சாலைகள் வாகனப் போக்கு வரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
அதேபோல், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னி யாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த மாவட்டங்களிலும் வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன. தேவையில்லாமல் வாக னங்களில் சுற்றியவர்களைப் போலீஸார் எச்சரித்து அனுப்பினர். பலருக்கு அபராதம் விதித்தனர்.
ஆம்புலன்ஸ்கள் மட்டும் இயங்கின. மருந்தகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக் கப்பட்டிருந்தன.
முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வீடுகளி லேயே முடங்கினர்.