

கள்ளக்குறிச்சி இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த் துறையின் சார்பாக, 5 நாள் தொடர் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.
பக்தி இலக்கியத்தில் மானுட மாண்புகள் என்ற தலைப்பிலான தொடர் கருத்தரங்க நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி முதல் நேற்று (5-ம் தேதி) வரை நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவி இரா.பிரவீனா வரவேற்றார். முதல்வர் உரையை கு.மோகனசுந்தர் நிகழ்த்தினார்.
கல்லூரி தலைவர் டாக்டர் க.மகுடமுடி தலைமை வகித்தார்.
தாளாளர் டாக்டர் ஜி.எஸ்.குமார், கல்லூரியின் கல்வி ஆலோசகர் அ.மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை முதல்வர் பெ.ஜான்விக்டர் மகிழ்வுரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கில், வெ.ராமன், ச.மதுரா, அ.சையத்ஜாகீர்ஹாசன், சா.சாம்கிதியோன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஆன்லைனில் பேசினர். செம்மொழி உயராய்வு நிறுவன மேனாள் பதிவாளர் முகிலை இராசப்பாண்டியன் சென்னையில் இருந்து தகைமை உரையாற்றினார். 5 நாள் நிகழ்வை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் க.ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் பாண்டியன், வை.பிந்து, நாகராஜன், சித்ரா, வீரராகவன், சீனிவாசன், தாமரைச்செல்வி, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிப் பணியை உடனிருந்து செய்திருந்தனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டன.