அறம் மக்கள் நலச்சங்க தலைவர் சு.ராஜா பாஜகவில் இணைந்தார்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட அறம் மக்கள் நலச் சங்கத் தலைவர் சு.ராஜா.
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட அறம் மக்கள் நலச் சங்கத் தலைவர் சு.ராஜா.
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான சு.ராஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அப்போது பிரதமர் மோடியின் செயல் திட்டங்கள் மிகவும் கவர்ந்ததாகவும், கரோனா காலகட்டத்தில் மோடியின் செயல்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியதாகவும், மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாகவும் சு.ராஜா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அறம் தொலைக்காட்சி சிஇஓ ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in