

செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரே நாளில் 635 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 6,359 ஆக இருந்தது. நேற்று 274 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,633 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,445 பேர் குணமடைந்தனர்; 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,395 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 152 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,547 ஆக உயர்ந்துள்ளது. இதில், 983 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்வரை 4,597 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,806 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 94 பேர் உயிரிழந்துள்ளனர்.