Published : 27 Sep 2015 10:07 AM
Last Updated : 27 Sep 2015 10:07 AM

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜி.கே.வாசன் தலைமையில் தமாகாவினர் உண்ணாவிரதம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் தமாகா தலை வர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று உண்ணாவிர தப் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த உண்ணா விரதத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக உண்ணா விரதத்தை தொடங்கிவைத்து வாசன் பேசியதாவது:

மதுவினால் வீடும் நாடும் சீரழி கிறது. மாணவர்களும் பெண் களும்கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மதுவினால் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச் சியே பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறது.

அரசு மதுக்கடைகளை மூடாத தற்கு காரணம் அதில் இருந்து கிடைக்கும் அதிகமான வருமானம் தான். இந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானம் ரூ.24 ஆயிரம் கோடி என்று சொல்கிறார் கள். அதேநேரத்தில் 3 கோடி தமிழர் கள் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கு வதையும், சிறை பிடிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர் களை அத்துமீறி தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசின் போர் குற்றங் கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கை ஆகும். சர்வதேச விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த 3 பிரச்சினைகளுக்கும் காலவரம்பு நிர்ணயித்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

உண்ணாவிரதத்தில் கட்சியின் மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், எஸ்.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சி.ஞானசேகரன், பொதுச்செயலா ளர் விடியல் சேகர், மாநில மகளிரணி தலைவி ஏ.எஸ்.மகேஸ்வரி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x