தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ‘போலீஸ் நண்பர்கள் குழு’வுக்கு தடை விதிக்க முடிவு: அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ‘போலீஸ் நண்பர்கள் குழு’வுக்கு தடை விதிக்க முடிவு: அதிகாரிகள் தீவிர ஆலோசனை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் ‘போலீஸ் நண்பர்கள் குழு’வுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக் குழுவை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் அறிவுறுத்திஉள்ளதாகக் கூறப்படுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன்உயிரிழந்த விவகாரத்தில் ‘போலீஸ்நண்பர்கள் குழு’வைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் இந்த குழுவுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும் இவர்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ‘போலீஸ்நண்பர்கள் குழு’வை கலைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2013-ல் டிஜிபியாக இருந்த ராமானுஜம் இக் குழுவை கலைக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ‘போலீஸ் நண்பர்கள் குழு’வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இக்குழுவை பயன்படுத்த தற்காலிகத் தடை விதிக்குமாறு அனைத்து மண்டல காவல் துறைதலைவர்களுக்கும் தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்துவாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘போலீஸ் நண்பர்கள் குழு’வை பயன்படுத்த தடை விதித்து சரக காவல் துறைதுணைத் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in