சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் நிறைவு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்: கிராமப் பகுதிகளில் சிறு வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் நிறைவு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்: கிராமப் பகுதிகளில் சிறு வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி
Updated on
2 min read

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களில் முழு ஊரடங்கு முடிந்து, இன்று முதல் சில தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னை காவல் எல்லைக்குள் வராத புறநகர் மாவட்ட கிராமப் பகுதிகளில் மட்டும் சிறு வழிபாட்டுத் தலங் களை திறக்க அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிந்த 5-ம் கட்ட ஊரடங்கு, ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது.

என்னென்ன தளர்வுகள்?

இன்று முதல் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர், செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம், கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் சென்னை காவல் எல் லைக்குள் வராத பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய விவரம்:

l கிராமப் பகுதிகளில் ரூ.10 ஆயி ரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் வரும் சிறிய கோயில் மற்றும் சிறிய மசூதி, தர்கா, தேவாலயங்கள் திறக்க அனு மதிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திறக்க அனுமதி இல்லை.

l தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஐ.டி. மற்றும் அதுசார்ந்த தொழில் நிறுவனங் கள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தனியார் நிறு வனங்கள், ஐ.டி. தொழில் பிரிவுகள் 20 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம்.

50 சதவீத பணியாளர்கள்

l மால்கள் தவிர இதர கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். ஒரு நேரத்தில் 5 வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

l தேநீர் கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம். காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் இயங்கலாம்.

l ஓட்டுநர் தவிர்த்து, வாடகை வாகனங்கள், டாக்ஸி 3 பயணிகளுடனும், ஆட்டோ, ரிக்‌ஷா 2 பயணிகளுடனும் இயங்கலாம்.

l மீன், இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்கலாம்.

சென்னை காவல் எல்லை

l சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், ஐ.டி. மற் றும் அதுசார்ந்த நிறுவனங்களில் 50 சதவீதம் பேர் என அதிகபட்சம் 80 பேருடன் இயங்கலாம். தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்று மதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க லாம்.

l மால்கள் தவிர இதர துணி மற்றும் நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

l தேநீர் கடைகளில் பார்சல்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு.

l காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

l ஓட்டுநர் தவிர்த்து, வாடகை வாகனங்கள், டாக்ஸி ஆகி யவை 3 பயணிகளுடனும், ஆட்டோ, ரிக்‌ஷா ஆகியவை 2 பயணிகளுடனும் இயங்கலாம்.

முடிதிருத்தகம், ஸ்பா

l முடிதிருத்தகம், சலூன், ஸ்பா, அழகு நிலையங்கள் அதற்கான நிலையான வழி காட்டுதல்களுடன் இயங்கலாம்.

l மீன், இறைச்சிக் கடைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம்.

இதுதவிர மற்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் களின்படி தடை நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in