Published : 05 Jul 2020 19:41 pm

Updated : 05 Jul 2020 19:41 pm

 

Published : 05 Jul 2020 07:41 PM
Last Updated : 05 Jul 2020 07:41 PM

கோவில்பட்டியில் ஒரே நாளில் 18 பேருக்குக் கரோனா தொற்று உறுதி

coronavirus-confirmed-to-18-people-in-kovilpatti

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரிச் சந்தை வியாபாரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 18 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கோவில்பட்டியில் செயல்படும் நகராட்சி தினசரி தற்காலிகச் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மார்க்கெட் ரோட்டிலுள்ள நகராட்சி தினசரிச் சந்தையில் இயங்கும் மளிகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2-ம் தேதி சளி மாதிரி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் 4 பெண்கள் உட்பட 18 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 13 பேர் தினசரிச் சந்தையில் பணியாற்றுபவர்கள். ஏற்கெனவே நேற்று முழு ஊரடங்கு என்பதால் தினசரிச் சந்தை அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கோவில்பட்டி நகராட்சி தினசரிச் சந்தை இன்று (6-ம் தேதி) முதல் ஜூலை 12-ம் தேதி வரை மூடப்படும் என நகராட்சி ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்18 பேருக்கு கரோனாகோவில்பட்டிகரோனா பரவல்தினசரிச் சந்தைமார்க்கெட்நகராட்சி சந்தைகோவில்பட்டி நகராட்சிகிருமிநாசினிகொரோனா வைரஸ்Corona virusCorona tnCorono virusOne minute newsKovilapatti news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author