

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு சில தினங்களுக்கு முன்பு நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஒரே குழியில் 6 பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இப்பகுதி சமையற்கூடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.