

மதுரை மாநகராட்சியில் 2-வது மண்டலத்தில் மிக அதிகமானோர் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த 3-ம் தேதி அடிப்படையில் 1,840 பேர் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 1-ல் 482 பேரும், மண்டலம் 2-ல் 564 பேரும், மண்டலம் 3-ல் 392 பேரும், மண்டலம் 4-ல் 402 பேரும் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 85-வது வார்டு ஜட முனிகோவில் பகுதியில் 48 பேரும், 77-வது வார்டு சுந்தரராஜபுரத்தில் 38 பேரும், 25-வது வார்டு கன்னநேந்தல் பகுதியில் 42 பேரும், 35-வது வார்டு மதிச்சியத்தில் 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
42-வது வார்டு சொக்கிகுளத்தில் 33 பேரும், 47-வது வார்டு ரிசர்வ் லைனில் 43 பேரும், 17-வது வார்டு எல்லீஸ் நகரில் 39 பேரும், 3-வது வார்டு ஆணையூரில் 31 பேரும், 4-வது வார்டு ஆலங்குளம் பகுதியில் 34 பேரும், 19-வது வார்டு பொன்மேனி பகுதியில் 46 பேரும் அதிகபட்சமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வார்டுகளில் 10 பேர் முதல் 30 பேர் வரை சராசரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5-ம் தேதி வரை வெளியான பாதிப்புகளை கணக்கீடும்போது இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.
மாநகராட்சியில் ‘கரோனா’ தொற்றுக்கு ஒரு வார்டு கூட தப்பவில்லை. அனைத்து வார்டுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் இரவு, பகல் பராமல் இந்த தொற்றுநோய் தடுப்புப் பணியிலும், பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் சேர்க்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
மேலும், மருத்துவர்கள் ஆலோசனை பேரில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோருக்கு மருந்து மாத்திரைகளையும் இவர்களே கொண்டு போய் கொடுக்க வேண்டிய இருப்பதால் மாநகராட்சி சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மிகுந்த மனநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.