

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவம் மிகவும் வேதனையானது. அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றம் மற்றும் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காவல் துறை சிறப்பாக செயல்பட்டாலும், இதுபோன்ற சிறு சம்பவம் இழுக்கை ஏற்படுத்தி விடும் என்றார்.