Published : 05 Jul 2020 08:16 AM
Last Updated : 05 Jul 2020 08:16 AM

மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால் இனியாவது வேகமெடுக்குமா எய்ம்ஸ் பணிகள்?- கரோனாவால் கடன் கிடைப்பதில் சிக்கல்

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை

கரோனா தொற்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு வதற்கு, ஜப்பான் நாட்டு வங்கிக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மருத்துவமனை திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அதனால், திட்டப் பணிகள் வேக மெடுக்குமென எதிர்பார்க்கப்படு கிறது.

மதுரையில் 2019ம் ஆண்டு ஜனவரியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ. 1,264 கோடியில் 750 படுக்கை வசதிகளுடன் பிரம் மாண்டமாக மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்காக தோப்பூரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத் தினர். இந்தியாவின் பிற இடங் களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது. ஆனால், தோப்பூர் எய்ம்ஸ்-க்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா (JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கோரியது. ‘ஜெய்கா’ நிறுவன அதிகாரிகள் குழு, தோப்பூரில் வந்து ஆய்வு செய்து சென்றனர்.

அவர்கள், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு நிதி ஒதுக்கவில்லை. இந்நிலையில், ரூ. 21.20 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை சாலையை மேம்படுத்தும் பணி தொடங்கியது.

தற்போது சாலைப் பணிகள் ஓரளவு முடிந்துள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் மருத் துவமனை கட்டுமானப்பணி தடை ப்பட்டுள்ளது.

கரோனாவால் சிக்கல்

தற்போது உலக பொருளாதாரம் கரோனா வைரஸால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதில் இருந்து மீளவே சில ஆண்டுகள் ஆகும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நிறுவனத்தின் கடன் கிடைக்குமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசிதழில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் பற்றி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இனியாவது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி வேகம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட மக்களிடம் ஏற் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x