

சேவா பாரதி அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.ராமநாதன் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம் விவகாரத்தில் சேவா பாரதி அமைப்பை தொடர்புபடுத்தி சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் சேவா பாரதி குறித்து கூறி, தனது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னேற்றப் பணியில் அர்ப்பணித்து, சேவையாற்றிவரும் லட்சக்கணக் கான தன்னார்வ தொண்டர்கள் மூலம், சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்.
நாடு முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட சேவைகளை சேவாபாரதி மேற்கொண்டுவருகிறது.
கிராம முன்னேற்றம், சுயசார்பு நோக்கங்களை முன்வைத்து பல தொழிற் பயிற்சிகளை வழங்கிவருகிறோம். இதன்மூலம் பல லட்சம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக் கானோருக்கு உணவு, மளிகைப் பொருட்கள், மருத்துவ உதவி களை வழங்கியுள்ளோம்.
இதைப் பொறுக்க முடியாத சிலர், சாத்தான்குளம் காவல் நிலைய விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இவற்றை முறியடிக்க சட்டப்பூர்வமான நட வடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இவ்வாறு ஆர்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.