

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள தொல்காப்பியர் நகரில் உள்ள 4, 5-வது தெருக்களில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் கடந்த சில நாட்க ளாக தண்ணீர் கலங்கலாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை விநியோகிக்கப்பட்ட குடிநீரை அருந்திய அப்பகு தியைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 25 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு மகர்நோன்புசாவடி தாய்சேய் நலவிடுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுகாதாரப் பிரிவினரும் அங்கு முகாமிட்டு, மருத்துவ பரிசோதனை செய்து, மாத்திரைகளை வழங்கினர். மாநகராட்சி அலுவலர்கள் சென்று விசாரித்ததில், அப்பகுதியில் புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியின்போது, குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டிருப்பதும், அதன் வழியாகக் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதும் தெரியவந்தது. அந்தக் குழாயைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.