

பெண்களின் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களிடம் இருந்து தமிழக அரசின்சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதைப் பெற பெண்களின் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக பணியாளரிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் நாளை (ஜூலை 6) மாலை 5மணிக்குள் திருவள்ளூர் மாவட்ட சமூகநல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்தநடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். சமூக சேவை நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் (தொலைபேசி எண். 044-29896049) என்றமுகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.