

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக ஜெயந்தி நியமிக்கப்பட்டார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக இருந்த ஜெயந்தி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றார். இதையடுத்து, மருத்துவமனையின் கல்லீரல் துறை இயக்குநர் கே.நாராயணசாமி கூடுதலாக டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.
பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த தேரனிராஜன், சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை குணமடைந்ததைத் தொடர்ந்து ஜெயந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.