Published : 05 Jul 2020 07:08 AM
Last Updated : 05 Jul 2020 07:08 AM

3,500 மண்டபங்களில் நடக்க இருந்த 1.12 லட்சம் சுபநிகழ்வுகள் ரத்து: கரோனா ஊரடங்கால் நடவடிக்கை

கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் 3,500 மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டிசம்பர் வரை நடக்க இருந்த 1.12 லட்சம்சுபநிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதேபோல், திருமணங்களும் பெரிய அளவில் நடக்காததால், தமிழகம் முழுவதும் திருமண மண்டபங்களும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. திருமணம் போன்ற சுபநிகழ்வுகளுக்காக முன்பதிவு செய்திருந்தவர்களும் ரத்து செய்து வருகின்றனர்.

ஏராளமானோர் வேலையிழப்பு

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் அமல்ராஜ் கூறும்போது, ‘‘கரோனாவால் தமிழகம் முழுவதும் உள்ள 3,500மண்டபங்களில் டிசம்பர் மாதம்வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்த 1.12 லட்சம் நிகழ்வுகளும்ரத்து அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் நாதஸ்வரகலைஞர்கள், சமையல் கலைஞர்கள், பூ மாலை அலங்காரம், பந்தல்அலங்காரம் செய்பவர்கள் எனஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

கடனை செலுத்த முடியவில்லை

திருமண மண்டபம் மற்றும்இதைச் சார்ந்த சிறு தொழில்களுக்காக வாங்கிய வங்கிக் கடனை திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே, திருமண மண்டபங்களில் சமூக இடைவெளி விட்டு மக்கள் கலந்துகொண்டு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அரசு ஆணையிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x