

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக் கையை அளித்ததுடன், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோ சனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி யுள்ளது. குணமடைபவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வரும் நிலை யில், உயிரிழப்பும் அதிகரித்து வரு கிறது. வழக்கமாக தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை கள் குறித்து அரசிடம் இருந்து அறிக்கை பெற்று மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வழங்குவார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதர சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் ஆளுநரை நேரடியாக சந்தித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 3 முறை ஆளுநரை சந்தித்துள்ள முதல்வர், கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை அளித்ததுடன், ஆளுநரின் ஆலோசனைகளையும் பெற்று வந்தார். கடந்த முறை சந்திப்பின்போது தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனி சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் சி.விஜயபாஸ் கர், தலைமைச் செயலர் கே.சண் முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.
35 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தற் போது வரை கரோனா தொற்று பரவல், அதை தடுக்க எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டமைப்புகள் உள் ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக் கையை ஆளுநரிடம் முதல்வர் அளித்தார். கரோனா தடுப்புக்காக பல்வேறு துறைகளின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை கள் குறித்தும் விளக்கினார்.
இதுதவிர, சாத்தான்குளம் விவ காரம் குறித்தும், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளு நரிடம் முதல்வர் விளக்கியதாக கூறப்படுகிறது.