Published : 04 Jul 2020 09:26 PM
Last Updated : 04 Jul 2020 09:26 PM

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு 

கோவில்பட்டி 

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இ. சி. ஹெச். எஸ். (ex-service men contributory health scheme) கூட்டம் ஜூன் 12-ம் தேதி நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக நாடு முழுவதும் 291 தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்யப்பட்டன.

இதற்கு ஒப்புதல் அளித்து ஜூலை 2-ம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனையாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இ.சி.ஹெச். எஸ். மெடிக்கல் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து ஸ்ரீ மருத்துவமனை மருத்துவர் லதா ஸ்ரீ வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இ.சி.ஹெச்.எஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஜூலை 15-ம் தேதி முதல் கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x