சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Updated on
1 min read

தந்தை, மகன் மர்ம மரணம் விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவருடன் தன்னை தொடர்புபடுத்தி பேசியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த இசக்கி ராஜா, பாலகிருஷ்ணன் பாண்டி தினேஷ் ஆகிய நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்திருந்தது.

இந்த நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு ராஜலட்சுமி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிவாரணத் தொகையை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சாத்தான்குளம் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "சாத்தான்குளம் விவகாரத்தில் எவ்விதமான அரசியல் தலையீடும் இல்லை என்று சிபிசிஐடி ஐஜி நேற்றே விளக்கமளித்து விட்டார் .


மேலும் அதில் அரசியல் செய்பவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது முற்றிலும் தவறானது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தினர். அதனைக் கொண்டு தொடர்புபடுத்துவது தவறானது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. சாத்தான்குளம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு" தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in