

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேர் குணமடைந்தனர். நேற்று இரவு முதல் இன்று பகல் 12 மணி வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவர் இறந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 540-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 345 பேர் குணமடைந்தனர்.
தற்போது 150 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரைக்குடியைச் சேர்ந்த 60 வயது முதியவர் இறந்தார்.
இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயது ஆண் மரணமடைந்தார். மேலும் நேற்று இரவு முதல் இன்று பகல் 12 மணி வரை காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்தனர்.