வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 2 நாள் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 2 நாள் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவியது. சென்னை உள்ளிட்ட பகுதி களில் அனல் காற்று வீசியது. இந்நிலையில், மேற்கு - மத்திய வங்கக்கடலில் ஆந்திர மாநி லம் மற்றும் தென் தமிழக கரை யோரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது கடலோர ஆந்திரம் மற்றும் ராயல சீமா பகுதிகள் வரை நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப் பாக தமிழகத்தின் உள் மாவட் டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.

தேனி, திருநெல்வேலி உள் ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ. மழை பதிவானது. விருதுநகர், திருவண்ணாமலையில் 7 செ.மீ., சாத்தனூர் அணையில் 6 செ.மீ., ஆண்டிப்பட்டி மற்றும் ராசிபுரத்தில் 4 செ.மீ., பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, சங்கரிதுர்க்கம், சாத்தூர், செங்கம், கரூர், அதிராம் பட்டினம், பெரியகுளம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்தது.

தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்காத தென்மேற்கு பருவ காலத்தில், ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மட்டு மின்றி புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும் கேரளாவிலும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெயில் சற்று தணிந்துள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் நேற்று 37.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதுரையில் 37.6, கரூரில் 37, சேலத்தில் 35.6, பாளையங்கோட்டையில் 35.4, சென்னையில் 35.1 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in