

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை:
சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள்கைது செய்யப்பட்டு, கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடிவிசா
ரணை நடந்து வருகிறது. இதை அப்பகுதி மக்களும் வரவேற்றுஇருப்பதுடன், அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளனர்.
ஆனால், இவற்றுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் காவல் துறை, அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்தவிமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.
இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் அறிக்கையின் பேரிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையிலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியிருந்தார்.
தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், உரிய உட்சபட்ச தண்டனையை பெற்றுத்தருவோம் என்பதையும், உயர் நீதிமன்ற கிளையின் கருத்தறிந்து சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதில், எங்கே அரசு தவறிழைத்தது? எங்கே காவல்துறை காலதாமதம் செய்தது? முதல்வர் எங்கு முரண்பாடாக பேசினார்? நீதி எங்கே மறுக்கப்பட்டது? என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட பொறுப்பு
கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்தார். கடந்த மார்ச் 22-ல் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.