

மதுரை, விருதுநகர் உட்பட தென்மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பை 30 நிமிடங் களில் அறியும் வகையில் ‘ ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’ பரிசோதனை கருவிகளை வாங்க வலியுறுத்தி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ்-ல் உள்ள ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவாவிடம் ஜூலை 1-ல் நேரில் கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து அவர் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு ஜூலை 2-ல் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
விருதுநகர் மாவட்ட தலை மை மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தென்மாவட்டத்திலுள்ள மருத்து மனைகளுக்கு பி.சி.ஆர் பரிசோ தனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. விருது நகர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சோதனை யைத் தொடங்குவதற்கு விரைவு ஆன்டிஜென் டெஸ்ட் களைப் பயன் படுத்திக் கொள்ள விரும்பினால் ஐசிஎம்ஆரின் www.icmr.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப் பட்ட மருத்துவமனைக்கு தகுதி இருந்தால் ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளிக்கும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.