

திருப்பூர் மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக ஜி.கார்த்திகேயன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே காவல் ஆணையராக பொறுப்பு வகித்த சஞ்சய் குமார், சென்னை தொழில்நுட்ப சேவை பிரிவு ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த ஜி.கார்த்திகேயன், ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நேற்று காலை பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது ‘‘கரோனா நோய்த் தொற்று தொடர்பான அரசின் உத்தரவுகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். குற்றத்தடுப்பு மற்றும் மத நல்லிணக்க நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என்றார்.