

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா ஆகிய இடங்களில் தலா 5 செமீ செமீ மழை பதிவாகியுள்ளது.