

காவல் துறை ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கோயில்களில் இருந்து கடத்தப்பட்டு, வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பழமையான மிக விலை உயர்ந்த சிலைகளை அவரது பணிக்காலத்தில் கண்டறிந்து மீட்டு வந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு நண்பரை பார்ப்பதற்காக நேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.