

சென்னை சாலிகிராமம் பகுதியில் மாநகராட்சி சார்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத வர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் இயங்கி வருகிறது. அதன் பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் சாலிகிராமத்தில் உள்ள கரோனா சிகிச்சை முகாமில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சைவழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் 744 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 90 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், 80 வயதுக்கு மேற்பட்ட 3 பேர், 70 வயதுக்கு மேற்பட்ட11 பேர் உட்பட 539 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வட சென்னையில் டாக்டர் அம்பேத்கர் அரசுகலைக் கல்லூரியிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மையங்களை மேலும் அதிகரிக்கவும், கூடுதலாக சுமார் 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.