

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ் ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார்.
லடாக்கில் இந்திய-சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின், குழந்தைகளுக்கு எதிர்கால வைப்பு நிதியாக ரூபாய். 5 லட்சதை, அறம், விசுவாசம், க/பெ. ரணசிங்கம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ் சார்பாக நடிகர் அருண்மொழித்தேவன், நடிகர் பருத்திவீரன் வெங்கடேஷ் ஆகியோர், இன்று கழுகூரணியில் இருக்கும் ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவியிடம் வழங்கினர்.
தமிழக காவல்துறையில் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், பெண்கள் காவலர்கள் சேர்ந்து நிதி திரட்டி, ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவியிடம் ரூ. 1 லட்சமும், பழனியின் தந்தையிடம் ரூ. 18 ஆயிரமும் 2 நாட்களுக்கு முன்பு வழங்கினர்.
ராணுவ வீரர் வீரமரணம் அடைந்ததற்கு, மாவட்டத்தில் முதன் முறையாக காவல்துறையினர் சார்பில் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
பழனியின் குழந்தைகள் இருவரும் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கின்றனர். அந்தப் பள்ளியின் உரிமையாளர் கணேச கண்ணன், குழந்தைகள் இருவரின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.