இந்தியாவில் பாதசாரிகளால் விபத்துகள் அதிகரிப்பு: முதலிடத்தில் குஜராத்; தமிழகம் 3-ம் இடம்

இந்தியாவில் பாதசாரிகளால் விபத்துகள் அதிகரிப்பு: முதலிடத்தில் குஜராத்; தமிழகம் 3-ம் இடம்
Updated on
1 min read

இந்தியாவில் பாதசாரிகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரம், தமிழகம் அடுத்த இரு இடங்களையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் 2013-ம் ஆண்டில் 4,86,476 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் 4,90,383 விபத்துகள் நடந்துள்ளன.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தில், இவ்விரு ஆண்டுகளிலும் நடைபெற்ற மொத்த விபத்துகளில் ஓட்டுநர் களின் கவனக்குறைவால் 7,65,579 விபத்துகள் நடைபெற்றதாக வும், இதில் 2,01,806 பேர் உயிரிழந்த தாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதசாரிகளின் கவனக்குறை வால் 21,981 விபத்துகள் நடந்துள் ளன. இதில் 8,492 பேர் இறந் துள்ளனர். மோசமான சாலை யால் 13,736 விபத்துகளும், காலநிலை மாற்றத்தால் 9,318, பிற காரணங்களால் 1,40,089 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விபத்துகளைப் பார்க்கும்போது தமிழகம் முதலிடத் தில் உள்ளது. தமிழகத்தில் 1,21,165 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1,11,296 விபத்துகளும், குஜராத்தில் 44,322 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதில் முறையே 28,248, 22,072, 13,057 பேர் இறந்துள்ளனர்.

பாதசாரிகளால் விபத்துகள் ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் 2,648 விபத்துகளும், அடுத்து மகாராஷ்டிரத்தில் 1,991, தமிழகத்தில் 1,495 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.பாஸ்கரன் கூறியதாவது: பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளே காரணமாக உள்ளனர். அடுத்து அதிக விபத்து களுக்கு பாதசாரிகள் காரணமாக உள்ளனர். விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஓட்டுநர்கள், பாதசாரிகள் இடையிலான கருத்து வேற்றுமை ஆகும்.

கருத்தொற்றுமை இல்லை

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது அதே சாலையில் வேகமாக வாகனத்தை ஓட்டி வருபவர், தன்னை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிடுவார் என நினைக்கிறார். வாகன ஓட்டுநரோ, பாதசாரி வாகனத்தை பார்த்ததும் சாலையை கடக்காமல் நின்றுவிடு வார் என நினைக்கிறார். இருவரும் நினைப்பது நடைபெறாதபோது விபத்துகள் ஏற்படுகின்றன.

தற்போது பாதசாரிகள் பலரும் சிக்னல் விழும் வரை காத்திருப்பதில்லை. சிக்னலில் நிற்கும் வாகனங்கள் இடையே புகுந்து சாலையை கடக்கின்றனர். வாகனங்களின் வேகத்தை கணிப் பது பாதசாரிகளுக்கு கடினமானது. வாகனங்களின் பின்புறமாக சாலை யைக் கடப்பதும் விபத்துகளை ஏற்படுத்தும். பாதசாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத் தில்தான் செல்ல வேண்டும். விதிகளை பின்பற்றி சாலையை கடந்தால் விபத்தை தவிர்க்கலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in