சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்த பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அதன்படி சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொணர உத்தரவு. பிறப்பித்தனர் அதனடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையமும் வருவாய் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது
இந்நிலையில் இன்று காலை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் புகழேந்தி அமர்வு முன்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி சிபிசிஐடி காவல் துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தங்களது விசாரணையை முடித்து விட்டனர்.
தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்துவிட்டனர். ஆகவே வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டினை நீக்கி கொள்ள வேண்டும் என முறையிட்டார்
அதை ஏற்ற நீதிபதிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பவும் உத்தரவிட்டனர்.
