தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால்உற்பத்தியாளர்களுக்கு கறவைமாடுகள் வாங்க கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் தற்போது 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அரசு முடிவு எடுக்கும்.

கறவை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.28 ஆயிரம் வட்டி இல்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதன் முறையாக பால்உற்பத்தியாளர்களுக்காக பாலின் அளவு மற்றும் கொழுப்பு சத்தை அறிந்து கொள்வதற்காக நவீன கருவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு காப்பீடு செய்யப் பட்டுள்ளது.

இதன் பிரிமியத்தில் பாதி தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு சங்கம் வழங்கும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in