

திருச்சி மாவட்டம் புலி யூரைச் சேர்ந்தவர் ஏ.நாக ராஜன்(65). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர்.
சளி, காய்ச்சல் காரண மாக சில நாட்களுக்கு முன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் நேற்று முன்தினம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் இவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பிற்பகல் நாகராஜன் உயிரிழந்தார். நாகராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
திருச்சியில் கடந்த ஜூன் 26-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசிய விவசாய பிரதிநிதிகள் 12 பேரில் புலியூர் நாகராஜனும் ஒருவர்.
இவருக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் பார்மசிஸ்ட் ஆக பணியாற்றும் சரோஜா என்ற மனைவியும், திருமணமாகி சென்னையில் வசித்துவரும் ப்ரியா என்ற மகளும் உள்ளனர்.
ஜி.கே.வாசன் இரங்கல்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியி ருப்பதாவது:
புலியூர் நாகராஜனின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அவரது இழப்பு, அவரது குடும்பத்தி னருக்கும், தமிழக விவசாயிகளுக் கும், தமிழ் மாநில காங்கிரஸுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித் துள்ளார்.